தோத்திரம் செய்வேனே – ரட்சகனைத்
தோத்திரம் செய்வேனே
பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
பார்த்திபனை, யூதக் கோத்திரனை, என்றும்
1.
அன்னை மரி சுதனை, – புல் மீது
அமிழ்துக் கழுதவனை,
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,
முன்னுரை நுற்படி, இந்நிலத் துற்றோனை – தோத்திரம்
2.
கந்தை பொதிந்தவனை, – வானோர்களும்
வந்தடி பணிபவனை,
மந்தையர்க் கானந்த மாட்சியளித்தோனை,
மான பரன் என்னும் ஞான குணவானை – தோத்திரம்
3.
செம்பொன் னுருவானைத், – தேசிகர்கள்
தேடும் குருவானை
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி. – தோத்திரம்
thoththiram seyvene – radchakanaith
thoththiram seyvene
baththiramakka immathram karunaivaithdha
barththipanai, yudhak koththiranai, endrum
1.
annai mari sudhanai, – bul meethu
amizhthuk kazhudhavanai,
munnanai mathurra sinnak kumaranai,
munnurai nurpadi, inth nilath thutrronai – thoththiram
2.
kanththai pothinthdhavanai, – vanorkalum
vanthdhadi panipavanai,
manththaiyark kananthdha madsiyaliththonai,
mana paran ennum njana kunavanai – thoththiram
3.
sempon nuruvanaith, – thesikarkal
thedum kuruvanai
ampara meviya umpar kanaththodu
anbu bera nindru, baim pon malar thuvi. – thoththiram